முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற நயன்தாராவின் ‘அறம்’

  | November 14, 2017 11:23 IST
Aramm Movie Review

துனுக்குகள்

  • இதில் லேடி சூப்பர் ஸ்டார் கலெக்டராக நடித்துள்ளார்
  • இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது
  • திரையுலக நட்சத்திரங்களும் படத்தை புகழ்ந்து ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்
தாஸ் ராமசாமியின் ‘டோரா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியுள்ள இதில் நயன்தாரா கலெக்டராக வலம் வரவுள்ளாராம். மேலும், ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, பல முன்னணி திரையுலக நட்சத்திரங்களும் தங்களது டிவிட்டர் பக்கங்களில் படத்தை புகழ்ந்து ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர். தற்போது, படத்தை பார்த்து ரசித்த நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘அறம்’ டீமை வெகுவாக பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்