விளம்பரம்
முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரை சந்திக்க ரசிகர்களே தயாராகிக்கொள்ளுங்கள்

  | May 10, 2017 14:45 IST
Super Star Rajinikanth

துனுக்குகள்

  • 10 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார்
  • ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்பு நிகழ்ச்சி தள்ளிப்போனது
  • சந்திப்பு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வரும் மே 15 ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 12 முதல் 17 ஆம் தேதி வரை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சூப்பர் ஸ்டாரின் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து ஃபோட்டோ எடுப்பதில் சந்திப்பதில் சிக்கல் இருக்கும் என்பதால் தற்காலிகமாக எந்த ஒரு மறு தேதி அறிவிப்புமின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ரசிகர்களை சூப்பர் ஸ்டார் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்திப்பின் முதல் கட்டமாக மே மாதம் 15 தேதி முதல் 19 தேதி வரை கரூர், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தை சார்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்