முகப்புகோலிவுட்

இமயமலைக்கு புறப்பட்ட ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்

  | March 10, 2018 12:31 IST
Superstar Rajinikanth

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் 3 படங்கள் உள்ளது
  • வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளார் ரஜினி
  • இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க ரஜினி திட்டமிட்டுள்ளார்
‘கபாலி’ படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள புதிய படம் என 3 படங்கள் இருக்கிறது. இதில் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘காலா’ படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி அமைக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது ரசிகர்கள் முன்னிலையில் “நான் அரயசியலுக்கு வருவது உறுதி. அது இந்த காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் நான்தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நாங்க நிப்போம்” என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 10-ஆம் தேதி) ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினி “இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்