விளம்பரம்
முகப்புகோலிவுட்

போர் (அரசியல்) வரும்போது எல்லோரும் தயாராகிக்கொள்ளுங்கள் - சூப்பர் ஸ்டார் அதிரடி

  | May 19, 2017 11:51 IST
Celebrities

துனுக்குகள்

  • நான் பச்சை தமிழன்
  • என்னை தமிழனாக மாற்றியது தமிழர்கள் தான்
  • அரசியல் அமைப்பு தற்போது கெட்டு போகியுள்ளது
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று இறுதி நாளான இன்று வழக்கம் போல் காலை 8 .45 மணியில் உள்ள அவரது திருமண மண்டபமான சென்னை kodambakkam உள்ள கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார் இன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோத, நிதானமாக மேடை ஏறிய ரஜினி, "என்னை காண வந்த அனைவருக்கும் நன்றி உங்கள் அன்பிற்கு நான் தலைவணங்குகிறேன், வேறு ஒரு மாநிலத்தில் இருந்து வந்த என்னை உங்கள் அன்பால் இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள் உங்களுக்கு எப்ப்போதும் நன்றி உணர்வோடு இருப்பேன், நான் கர்நாடகாவில் வாழ்ந்தது 23 ஆண்டுகள் மட்டும் தான் ஆனால் தமிழகத்தில் தான் 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன் என்னுடைய குடும்பம், குழந்தைகள் என எல்லாமே தமிழ் மண்ணில் தான் பிறந்தார்கள் தமிழ் மண்ணில் தான் வளந்தார்கள், அவர்களின் தாய் மொழியும் தமிழ் தான், நானும் பச்சை தமிழன் தான் என்னை தமிழனா உருவாக்கியதும் தமிழர்கள் தான் நான் இந்த மண்ணை விட்டு எங்கு போவேன், அப்படியே நான் போனாலும் அந்த இடம் இமையமலையாக தான் இருக்கும்" என்று கூறினார்.

மேலும், "சமூக வலைத்தளங்களில் என்னை போன்ற சினிமா கலைஞர்களை திட்டுவதும் கேலியாக பேசுவதும் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது, உண்மையை மக்களிடம் சொல்லுங்கள் பரப்புங்கள் அதில் எந்த தவறும் இல்லை போலியாக இருக்காதீர்கள், ஊடங்கங்கள் என்னை துரத்துகின்றன, நான் ஒதுங்கி போவதற்கும் அமைதியாக இருப்பதற்கும் பல காரணங்கள் உண்டு நான் ஏதாவது பேசினால் அது சர்சையாக மாறிவருகிறது அதுவும் ஒரு காரணம்" என்று பேசினார்.

இறுதியாக "ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒழுக்கம் தான் வாழ்வில் முக்கியம் அதை ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டும் எல்லாரும் அவங்க வேலை, குடும்பம் எல்லாத்தையும் கவனிங்க, அதே சமயத்தில் தமிழ்நாட்டில் நிர்வாகம் சரியில்லை, நிலைமையும் சரியில்லை நாட்டுக்கு போர்(அரசியல்) வரும், அப்போது நாட்டில் உள்ள வீரர்கள் போருக்கு (அரசியல்) தாயராவர்கள், அது போல நீங்களும் தயாராகி கொள்ளுங்கள், நம் நாட்டை காப்பாற்ற வேண்டும், அதே வேளையில் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி, சீமான் ஒரு போராளி, அன்புமணி, திருமாவளவன் போன்றவர்கள் சிறந்த அரசியல்வாதிகள் தான் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் " என ரஜினி சூசகாமாக அரசியல் பேச்சை பேசியுள்ளார்...
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்