விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘காலா’ பற்றி பேசிய ‘சூப்பர் ஸ்டார்’

  | December 30, 2017 12:01 IST
Rajinikanth

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் கைவசம் ‘காலா, 2.0’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • 2.0’ ரிலீஸுக்கு பிறகு 2 மாதங்கள் கழித்து ‘காலா’ வெளியிடப்படும்
  • இன்று சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார் ‘சூப்பர் ஸ்டார்’
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடிக்கின்றனராம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

சமீபத்தில், துவங்கப்பட்ட படத்தின் டப்பிங் பணியும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து பேசி வரும் ‘சூப்பர் ஸ்டார்’ “இயக்குநர் பா.இரஞ்சித் 'காலா' படத்தில் இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு ரஜினியை காட்டியிருக்கிறார். ‘2.0’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு 2 மாதங்கள் கழித்து ‘காலா’ வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார். ‘2.0’ ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது, இதனைத் தொடர்ந்து ‘காலா’ ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்