விளம்பரம்
முகப்புகோலிவுட்

அடுத்த மாதம் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி காந்த்

  | August 09, 2017 15:28 IST
Celebrities

துனுக்குகள்

  • செப்டம்பர் மாத இறுதியில் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளார்
  • ஜூன் மாதம் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த் சந்தித்தார்
  • "போருக்கு தயாராக இருங்கள்" என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் செப்டம்பர் மாத இறுதியில் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளார் எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'காலா' படத்தில் ரஜினி நடிக்கும் பகுதியின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் முடியும் என எதிரிப்பார்க்கப்ட்டு வரும் நிலையில், அதன் பின் தனது ரசிகர்களை மீண்டும் ரஜினி சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளர்த்து. சென்ற ஜூன் மாதம் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த் அவர்களுடன் தனித்தனியே ஃபோட்டோவும் எடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சி துவங்கிய சில நாளில் "போருக்கு தயாராக இருங்கள்" என்று அவர் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அங்கு அரசியல் குறித்து அறிவிப்பினை அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்