விளம்பரம்
முகப்புகோலிவுட்

எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘2.0’ மேக்கிங் வீடியோ பார்ட் 2

  | October 07, 2017 18:13 IST
Rajinikanth  2.0

துனுக்குகள்

  • ஷங்கரின் ‘எந்திரன்’ முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • மேக்கிங் வீடியோ பார்ட் 2-வை வெளியிட்டுள்ளனர்
  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடி வருகிறார். ரஜினிகாந்துக்கு எதிராக நம்மை மிரட்டும் வில்லன் வேடங்களில் அக்ஷய் குமார், சுதன்ஷு பாண்டே நடிக்கின்றனராம்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மேக்கிங் வீடியோ பார்ட் 1 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸாம். ஏற்கெனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


தற்போது, படத்தின் மேக்கிங் வீடியோ பார்ட் 2-வை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதம் (அக்டோபர்) துபாயிலும், நவம்பர் மாதம் டீஸர் வெளியீட்டை ஹைதராபாத்திலும், டிசம்பர் மாதம் டிரையிலர் ரிலீஸை சென்னையிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ஆம் தேதி ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்