முகப்புகோலிவுட்

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் '2.0' டீசர்! - ஷங்கர் ட்வீட்

  | September 07, 2018 16:47 IST
2.0 Teaser Date

துனுக்குகள்

  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார் . ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில்,வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், 3 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஷங்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, புதிய போஸ்டரையும் ஷேரிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்