முகப்புகோலிவுட்

ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ட்ரீட்

  | October 11, 2017 10:24 IST
2.0 Trailer Release Date

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் 2 படங்கள் உள்ளது
  • ஆடியோ ரிலீஸ் துபாயிலும், டீஸர் ரிலீஸ் ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது
  • சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ஸ்பெஷலாக டிரையிலரை வெளியிடவுள்ளனர்
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ரஜினிகாந்துக்கு எதிராக மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் 2 மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸாம். படத்தின் ஆடியோ ரிலீஸ் அக்டோபர் 27-ஆம் தேதி துபாயிலும், டீஸர் ரிலீஸ் நவம்பர் 22-ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது. தற்போது, படத்தின் டிரையிலர் வெளியீட்டு விழாவை வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ஸ்பெஷலாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ஆம் தேதி ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்