முகப்புகோலிவுட்

ரஜினி மகளுக்கு இரண்டாம் திருமணம்!

  | January 08, 2019 18:01 IST
Rajinikanth Daughter

துனுக்குகள்

  • ரஜினியின் இளய மகள் இவர்
  • ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்றார்
  • பேட்ட பொங்கல் அன்று வெளியாகிறது
திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மூன்று தலைமுறை சரிகர்களை தனது நடிப்பு திறமையால் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். தற்போது அவரது ரசிகர்களை நம்பி அரசியல் கட்சியும் தொடங்கவுள்ளார் என்பது அனைவருக்கம் தெரிந்த ஒன்றுதான். 

வரும் பொங்கல் அன்று கார்த்திக் சுபபுராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க தனது இளய மகளுக்கு திருமண ஏற்பாடும் பலமாக நடந்துக்கொண்டிருக்கிறது.

ரஜினியின்  இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சமீபத்தில்தான் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.
இந்த விவாகரத்தை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார்.  இந்த திருமணத்தற்காக எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்

நேற்று காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சவுந்தர்யா, லதா தரிசனம் செய்தனர்.
திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்