முகப்புகோலிவுட்

லீக்கான 'காலா' பட சண்டைக்காட்சி, அதிர்ச்சியில் படக்குழுவினர்

  | February 12, 2018 10:34 IST
Kaala Leaked Video

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் கைவசம் ‘காலா, 2.0’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தை ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சி லீக்காகியுள்ளது
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனராம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சி சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்