முகப்புகோலிவுட்

" 'காலா'ன்னா கருப்பு" அதிரடியான காலா டீசர்

  | March 02, 2018 12:28 IST
Kaala Movie Teaser

துனுக்குகள்

  • பா.இரஞ்சித் – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் 2-வது படம் ‘காலா’
  • இது ரஜினிகாந்தின் கேரியரில் 164-வது படமாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனராம்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 2-ஆம் தேதி) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ‘சூப்பர் ஸ்டார்’ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்