விளம்பரம்
முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரின் ‘காலா' எப்போது வெளியீடு?

  | February 11, 2018 00:07 IST
Kaala Intro Song

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் கைவசம் ‘காலா, 2.0’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்
  • படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனராம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.
 
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்