முகப்புகோலிவுட்

இது தான் ரஜினி படம்.... பேட்ட....

  | January 08, 2019 10:52 IST
Petta

இந்த பொங்கலை தீபாவளியாக மாற்றப்போவதும், கொண்டாடப்போவதும் ரஜினி ரசிகர்களே. அதற்கு முக்கிய காரணம் "பேட்ட" ட்ரைலர் தான்

ஒவ்வொரு வருடமும் தங்களுக்கு பிடித்த நடிகரின் படம் தீபாவளிக்கு வரவில்லையென்றால், அந்த படம் வரும் நாளையே தீபாவளியாக கொண்டாடுவோம் எனும் ரசிகர்களின் போஸ்டரை ஒவ்வொரு வருடமும் பார்த்திருப்போம். ஆனால் உண்மையிலேயே இந்த பொங்கலை தீபாவளியாக மாற்றப்போவதும், கொண்டாடப்போவதும் ரஜினி ரசிகர்களே. அதற்கு முக்கிய காரணம் "பேட்ட" ட்ரைலர் தான்.
 
fjfihf48

இதுவரை மூன்று தலைமுறை ரசிகர்களைத் தன் திரைப்பயணத்தில் கடந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். அதிலும் 1979ல் ஆறிலிருந்து அறுபதுவரை, 80'ல் பில்லா, 81'ல் தில்லுமுல்லு என எந்த ஜானர் படங்களிலும் நடித்து கலக்கியிருப்பார். அதன் பின் 90'களில் அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா என தனக்கென சாம்ராஜ்யம் அமைத்த மாஸ் ஹீரோவாக வலம் வந்திருப்பார். ஆனால் படையப்பாவிற்கு பின் 2002ல் வந்த பாபா முதல் 2018ல் வந்த 2.0 வரை வந்த படங்களில் ரஜினிகாந்த் அவருடைய சிறப்பான பங்கை கொடுத்திருந்தாலும் ஏதோ ஒன்றை இழப்பதாகவே அவரின் ரசிகர்களுக்கு தோன்றியது. இடைப்பட்ட காலத்தில் வெற்றி பெற்ற சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி கூட அவரின் ரசிகர்களுக்கு ரஜினி படம் பார்த்த திருப்தியை கொடுத்ததா? என கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். காரணம் இந்த படங்களில் எல்லாம் அந்த வின்டேஜ் ரஜினியை பார்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால் இவை அனைத்தும் சங்கர் படம், ரஞ்சித் படங்களே தவிர ரஜினி படமாக இல்லை என்பது தான் பல ரசிகர்களின் கருத்தாக இருந்தது. இதை உடைத்து எறிந்தது தான் கார்த்திக் சுப்புராஜின்" பேட்ட". இதே போன்ற தாக்கத்தை கபாலி டீசரும் கொடுத்திருந்தாலும், அதை விட ரசிகர்கள் பேட்டையை அதிகம் எதிர்பார்க்க காரணம், இதுவரை "ரஜினி சார்" என அழைக்கும் பல இயக்குநர்கள் படங்களில் நடித்திருந்தாலும், அனைத்து இடங்களிலும் "தலைவர்" என எப்போதும் அழைக்கும் அவரின் தீவிர ரசிகனான கார்த்திக் சுப்புராஜின் படத்தில் அவர் நடித்திருப்பது தான். அண்ணாமலை, படையப்பா, பாட்ஷா படங்களை போல் ஹேட்டர்சே இல்லாத ரஜினி படமாக "பேட்ட" இருக்கும் என்பதற்கு சில உதாரணங்கள்....
 
b90cgk8

சூப்பர் ஸ்டாரின் வெற்றி பார்முலாக்களில் ஒன்று தான்" இரண்டு பீரியட்" சப்ஜக்ட். படத்தின் ஒரு பகுதி அவரின் இளமை காலங்களிலும், மறு பகுதி பிளாஷ்பேக் அல்லது வயதான காலத்தில் நடப்பதாக கதை அமைந்திருக்கும். ரஜினியின் மெகா ஹிட்டான நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை, படையப்பா என படங்களில் கதையும் , திரைக்கதையும் இது தான். இதே பார்முலா பேட்ட படத்திலும் உள்ளது. ஒன்றில் முறுக்கு மீசையோடும், மற்றொன்றில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பது ட்ரைலரில் நன்றாக தெரிகிறது. இந்த இரண்டு ஏரியாவிலும் அவர் பின்னியிருப்பார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதே போல் பில்டப் வசனங்கள். சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கும் கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையான, அதே நேரத்தில் அவரின் மாஸை காட்டும் படி பல பில்டப் வசனங்கள் பேசுவார்கள். "சாதாரண ஒருத்தன் அடிச்ச அடி இல்ல.. நாடி நரம்பெல்லாம் சண்ட வெறி பிடிச்சவன் அடி" போல் பல வசனங்களை பல படங்களில் பார்த்திருக்கலாம். அதே போல் பேட்ட ட்ரைலரிலும் "இருபது பேர அனுப்பி வச்சேன், எல்லாரையும் அடிச்சு துவச்சிட்டான்", “ஒருத்தன் உட்காந்திருக்க தினுச பார்த்தே சொல்லிடுவேன்.. அவன் ரத்தம் பார்த்த பயலா? இல்லையானு.. இவன பார்த்தா சாதாரணமா தெரியல" , “ஒருத்தன்னே.. யாரோ ஹாஸ்டல் வர்டனாம்.. மரண காட்டு காட்டிட்டான்னே..” என பல பில்டப் வசனங்கள் பேட்ட டிரைலரிலும் இருக்கிறது. இப்போது வரும் பல படங்களின் ட்ரைலரில் இது போன்ற வசனங்கள் இருந்தாலும், பேட்ட ட்ரைலரில் வரும் வசனம் கதையே சொல்வது போல் உள்ளது தான் தனிச்சிறப்பு.. அதுவும் போக இது "ரஜினி படம்" .

மேலும் படிக்க - "ரஜினிக்கு முதல் அமைச்சர் பதவியா?"
 
js18jfl

மேலும் ரஜினியின் ஸ்டைல், வயசு, நிறம் என இதில் ஏதாவது ஒன்றை ஒரு கேரக்டர் பேசும். "வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் உன்ன விட்டு போகவே இல்ல” என்பது போன்ற வசனங்கள். பேட்ட டிரைலரிலும் அதை போலவே "பார்க்குறதுக்கு சின்ன பையன் மாதிரி இருக்கீங்க" வசனங்கள் பளிச்சிடுகிறது. அந்த வசனத்தின் வரும் போது சில ஷாட்டுகளில் சூப்பர் ஸ்டாரின் மேனரிசமும், துடிப்பான நடிப்பும், “நேச்சுரலி" எனும் போது அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷனும், படையப்பாவில் "யா.........” என்றபடி அவரின் கண்ணாடியை இறக்கிவிடும் போது பார்த்த ரஜினியை ஒரு நொடி காட்டி மறைகிறது.
அதே மாதிரி அவரின் கம்பேக் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு பெரிய பிளஸ்சாக பல படத்தில் இருந்திருக்கிறது. “கெட்ட பய சார் இந்த காளி....”, “ஒரு தடவை தான் தவறும்" போல ஒரு வரியில் மாஸ் காட்டுவது சூப்பர் ஸ்டாரின் இன்னொரு சக்சஸ் பார்முலா. பேட்ட டிரைலரிலும் "சிறப்பான..தரமான சம்பவங்கள இனிமே தான் பார்க்க போற..” என்று தன் பாணியில் மாஸ் காட்டியிருக்கிறார். இதுவும் பழைய ரஜினியை பார்த்த ஒரு அனுபவத்தை பலருக்கு தந்திருக்கிறது.
 
kjd5vps8

அத்தனைக்கும் மேலாக அவரின் வெற்றி படங்கள் அனைத்திலும் ஒரு வெறித்தனமான, ஆக்ரோஷமான வசனத்தை அமைதியாக பேசி கைதட்டல் அள்ளியிருப்பார். உதாரணமாக "இனி நான் உன்ன பார்த்தேன். பார்த்த இடத்துலயே குழி தோண்டி புதச்சிருவேன்".. “எனக்கு இன்னொரு முகமும் இருக்கு.... பார்க்காத.... தாங்கமாட்ட" போல பல வசனங்கள் உண்டு. அதே போல என்பதை விட, அதற்கும் மேலே பேட்ட டிரைலரிலும் வரும் , “கொலை காண்டுல இருக்கேன்........” எனும் வசனம் திரை அரங்கில் விசில் சத்தம் கிழியப்போவதை இப்போதே ரசிகர்களின் கண் முன்னே காட்டுகிறது. குறிப்பாக டிரைலரில் கடைசியாக மூவ்மென்டுடன், வேட்டி சட்டையில் வரும் ரஜினியை திரையில் பார்த்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்து.
 
ffid84lo

இதுவரை இருந்த அனைத்து பார்முலாக்களும் மீண்டும் இந்த படத்தில் இருந்தால் படம் க்ளீஷேவாக இருக்காதா என பலருக்கு தோன்றலாம். அப்படி க்ளிஷேவாக இருந்தாலும் அதை தான் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கவும் செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை இந்த ஏரியாவில் திருப்திபடுத்துவதில் ரஜினிகாந்த் ஒரு சக்கரவர்த்தி என அவரின் வரலாறு சொல்லும். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் சுப்புராஜ், அனிருத் & திரு காம்போ டிரைலரின் ஒவ்வொரு பிரேமிலும் ரஜினிகாந்த்தை ரசிக்கும் படி காட்டியிருப்பது படத்திலும் தொடரும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர். இதுவரை வந்த ரஜினி படங்களை விட பேட்ட படம் ரிப்பீட் ஆடியன்சை தியேட்டருக்கு வரவைக்கும் என்பது பல விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது. சமீபகாலமாக ரஜினி காந்த் அரசியலுக்கு வர இருப்பது, படம் நடிப்பதை நிறுத்தப்போவது, நடிக்கும் படங்களிலும் பழைய ரஜினியை பார்க்க முடியாமல் போனது என வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு" பேட்ட" பேரனுபவத்தை தரப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
u7qh9gu8

படத்தின் தலைப்பு பேட்ட என்பது சென்னைவாசிகள் பலருக்கு புதுபேட்ட, சைதாபேட்ட போன்ற பல இடங்களை ஞாபகபடுத்தும். ஆனால் படமோ மதுரையை மையமாக எடுக்கப்பட்டிருப்பது பலருக்கு குழப்பத்தை தரலாம். அவர்களுக்கு சிறிய தெளிவுரை....

படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மதுரையை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதனால் தான் அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடத்தை இந்த படத்திற்கு களமாகவும், தலைப்பாகவும் வைத்துள்ளார். இதே போல் மதுரையை களமாக கொண்டு வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் "பேட்டைக்காரன்" என்பது இங்கு நினைவுபடுத்தி கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் மதுரையின் முக்கிய சந்தை பகுதியாக "நெல்பேட்டை" என்றொரு பகுதி இருப்பதால், அதையே தலைப்பாகவும், களமாகவும் கார்த்திக் சுப்புராஜ் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்புள்ளது.
 
psb23qp

அதே போல அவருக்கு மிகவும் பிடித்தமான படம் என்றால் "முள்ளும் மலரும்" என பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அந்த படத்தின் களம் ஒரு மலை கிராமம். அதே போல் பேட்ட படத்தின் இன்னொரு களம் மலைப்பகுதி தான். இரண்டு படத்திலும் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் "காளி" . கார்த்திக் சுப்புராஜின் இந்த பேன் மூவ்மென்டை பார்க்கும் போது "கெட்டப்பய சார் இந்த கார்த்தி" என்றே சொல்ல தோன்றுகிறது. டிரைலரே பல ரசிகர்களுக்கு பழைய ரஜினியை பார்த்த திருப்தியை கொடுத்திருக்க இயக்குனரோ... சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் "இது சும்மா ட்ரைலர் தான்மா..” என்று காலர் தூக்கிவிட்டிருக்கிறார்.
 
gq196kig

பேட்ட அனைத்து ஏரியாவிலும் கல்லாகட்ட எங்களின் வாழ்த்துக்கள்....

மேலும் படிக்க - "விஸ்வாசத்தின்.. விஸ்வாசம்.." 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்