விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஒரே நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த ரஜினி

  | June 07, 2018 19:00 IST
Kaala

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் ‘2.0’ & கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 7-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளத
  • இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து ரஜினி கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ரஜினிக்கு மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளனர்.

சனந்த் ரெட்டிக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 7-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளது. இந்த ஷெடியூலில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்