விளம்பரம்
முகப்புகோலிவுட்

தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்

  | June 19, 2017 17:17 IST
Celebrities

துனுக்குகள்

  • தமிழக அரசியல் களத்தை ரஜினி காந்த் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்
  • போர் வரும்போது தயாராகிக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார்
  • காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது
தற்போது தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக வலுத்து வருகிறது. 1996 ஆம் கால கட்டங்களில் தமிழக அரசியல் களத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் கொடுத்த ஆதரவு மிகப்பெரிய அளவிற்கு எதிரொலித்தது.

ஆனால் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் அவர் அரசியலுக்கு வரவில்லை. அவரிடம் ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து வந்ததால் இனி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது ரசிகர்களை சென்னையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து அவர்களுடன் ஃபோட்டோக்களும் எடுத்துக் கொண்டார்.

ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசும்போது, “போர் வரும்போது தயாராகிக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அவர் போர் என்று கூறியதை தேர்தலைதான் என்று அனைத்துத் தரப்பினரும் கருதியதால் இம்முறை ரஜினி உறுதியாக அரசியலுக்கு வருவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்களுடன் முதல்கட்ட சந்திப்பை முடித்த ரஜினி தற்போது ‘காலா’ திரைப்பட முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் சற்று ஓய்வில் உள்ளார், ஜூலை மாதம் (அடுத்த மாதம்) அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து ஃபோட்டோ எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் அதன்பிறகே தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளான திசம்பர் மாதம் 12-ந்தேதி அன்று தனது அரசியல் தனது அரசியல் வரவு குறித்த அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

தனது பிறந்த நாள் அன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத்த முடியும் என்று ரஜினி திட்டமிடுகிறாராம்.

அடுத்த வருடம் ரஜினி நடித்துள்ள ‘எந்திரன் 2.0’ மற்றும் ‘காலா’ திரைப்படங்கள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்