முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரின் படத்தை கைப்பற்றிய ‘சூரியன்’ குழுமம்

  | September 28, 2017 12:45 IST
Kabali Satellite Rights

துனுக்குகள்

  • ‘கபாலி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • ரஜினி – இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் 2-வது படம் ‘காலா’
  • இதன் சேட்டிலைட் உரிமையை பிரபல சேனல் வாங்கியுள்ளது
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு (2016) வெளியான படம் ‘கபாலி’. பா.இரஞ்சித் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் கிஷோர், தினேஷ், வின்ஸ்டன் சாவ், கலையரசன், தன்ஷிகா, ஜான் விஜய், மைம் கோபி, ரித்விகா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இதற்கு முரளி ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். தற்போது, இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ‘சன் டிவி’யே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ஹீரோவாக நடித்து வரும் ‘காலா’ படத்தையும் பா.இரஞ்சித் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்