முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரை காலி செய்வாரா அல்டிமேட் ஸ்டார்....?

  | January 09, 2019 17:23 IST
Petta

துனுக்குகள்

  • அஜித்தும் ரஜினியும் மோதிக்கொள்வது இதுவே முதல் முறை
  • ரஜினியை வெல்வாரா அஜித்
  • நாளை களத்தில் இரங்குகிறது பேட்ட, விஸ்வாசம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில்  விஸ்வாசம் வெளிவர இருக்கிறது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட வெளியாகிறது.  தமிழ் திரையுலகில் முதல் முறையாக உச்சபட்ச நடிகர்களாக திகழும் ரஜினியும், அஜித்தும் மோதிக்கொள்வது இதுவே முதல் முறை.
 
இதற்கு முன்புவரை அஜித்திற்கு எதிராக விஜய்யைதான் ரசிகர்கள் நேர் எதிராக வைத்து பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்ட்டார் யார் என்கிற ஒரு பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
dc4jboug

 
அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டு வேறுசில காரணங்களால் இந்த பொங்கல் அன்று வெளியிட முடிவும் செய்யப்பட்டது. குறிப்பிட்டது போலவே பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று அறிவிப்புகள் வந்தன.
 
அதற்கான டிக்கெட் விற்பனையும் கடந்த ஒருவாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனியாக வந்து ஒட்டுமொத்த வசூலையும் அள்ளி விடலாம் என்று படக்குழு நினைத்துக்கொண்டிருந்த வேலையில் நுழைந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் படம் “பேட்ட” இந்த படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளத்தையே இறக்கியிருகிறார் கார்த்திக்.
 
a1tem81g

 
இந்த படமும் பொங்கல் ரேசில் விஸ்வாசத்திற்கு நேர் எதிராக களம் இறக்கப்பட்டிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் முன்பதிவு ஏகபோகமாக நடந்துக்கொண்டிருக்கிறது. நாளை இந்த இரண்டு படங்களும் வெளிவர காத்திருக்கிறது. இதுவரை 'பேட்ட' படம் 218 கோடி ரூபாய்க்கும், விஸ்வாசம் சுமார் 142 கோடி ரூபாய்க்கு வர்த்தமாகியுள்ளது என தகவல்கள் வந்துள்ளன. படம் வெளிவரும் முன்னரே லாபத்தை இந்த படங்கள் எடுத்துள்ளன.
 
இந்த நிலையில் பேட்ட படத்திற்கு தியேட்டர் கிடைக்கவிலை, விஸ்வாசத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்கிற இரு தரப்பு ரசிகர்களிடையே இருந்து செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.
 
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில் தமிழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் அனைத்தும் டிஜிட்டல் லைட், பேனர், போஸ்ட்டர். தோரணங்கள் என ஊரே திருவிழா கோலமாக மாறியிருக்கிறது.
 
2nr7kmm

 
இரண்டு படங்களில் எந்த படம் மக்களை வெகுவாக ஈர்க்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் கட்சிகளை போல ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் தொண்டர்களை தாண்டி நடுநிலையில் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் யாரை தேர்வு செய்கிறார்கள் என்பதில் தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கிறது.  அது போலவே அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களை தாண்டி வெகுஜன மக்களை ஈர்க்கும் படமாக எது இருக்க போகிறது என்பதை நாளை பார்ப்போம். சூப்பர் ஸ்டாரை காலி செய்து அல்டிமேட் ஸ்டார் வருவாரா இல்லையா என்பது சஸ்பண்ஸ்…….

மேலும் படிக்க : பேட்ட படத்துக்கு வந்திருக்கும் சோதனை!….. ரசிகர்கள் வேதனை!!
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்