முகப்புகோலிவுட்

"சூர்யா 37 பட டீம் இதுதான்" - கே.வி.ஆனந்த் ட்வீட்

  | March 13, 2018 16:42 IST
Suriya Next Film

துனுக்குகள்

  • இது சூர்யாவின் கேரியரில் 37-வது படமாம்
  • கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள இதனை ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது
ஹரியின் ‘சி 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யாவின் கேரியரில் 37-வது படமாம். ஏற்கெனவே, சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் ‘அயன், மாற்றான்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.
 

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தில் பணியாற்றும் டெக்னிஷியன்களின் பட்டியலை கே.வி.ஆனந்த் ட்வீட்டரில் அறிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையைக்கவுள்ள இந்த படத்திற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார், கிரண் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்