விளம்பரம்
முகப்புகோலிவுட்

மாணவர்களுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

  | May 12, 2017 16:07 IST
Celebrities

துனுக்குகள்

  • தேர்வு ரிசல்ட் நேரத்தில் தற்கொலைகள் அதிகமாக நடைப்பெற்று வருகிறது
  • இன்றைய இளைஞர்கள் பெற்றோர்களை விட நடிகர்கள் பேச்சை தான் கேட்கிறார்கள்
  • தேர்தலில் தோல்வி அடைவதால் வாழ்க்கை முடிந்து போவதில்லை
ஒவ்வொரு வருடமும் + 2 தேர்வு முடிவுகள் வெளியாக போதெல்லாம், அடுத்த இரண்டு நாட்களுக்கு நாளிதழ்களை இலகிய மனம் கொண்டவர்கள் படிக்க முடியாதளவுக்கு தற்கொலை செய்திகள் குவிந்திருக்கும். ‘+ 2 தேர்வில் ஃபெயிலான மாணவ மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை’ என்பதில் துவங்கி விதவிதமான முறையில் தற்கொலை செய்து கொண்ட புகைப்படங்கள் நாளிதழ்களில் இருக்கும். தன்னம்பிக்கை இழக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் மிக அவசியம் என்று பல முறை கூறி வந்தாலும் இந்த வழக்கம் வருடா வருடம் மாறுவதாக தெரியவில்லை.

ஆனால் “நாங்க சொன்னா அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் சொன்னா கேட்பார்கள்” என்று எத்தனையோ பெற்றோர்கள் கூறுவதுண்டு. அந்த நடிகர்கள் பேச வேண்டிய நேரம் இது தான். முன்னணி கதாநாயகர்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களில் பெரும்பாலும் +2 வை கடக்கிற வயதினர்தான். இந்த நேரத்தில், தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் வாழ முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று காத்திருக்கும் பெற்றோர்களுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இன்று தங்களது அதிகாரபூர்வ சமூகவலைத்தளத்தில் விடுத்த வேண்டுகோள் மனசுக்குள் பால் வார்த்திருக்கும்.

தேர்வில் தோல்வியடைந்த எத்தனையோ பேர் வாழ்கையில் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்துள்ளார்கள். மிகப் பெரிய புகழை வாரி குவித்துள்ளார்கள். தேர்வு முடிவுகள் எவ்வாறாக இருப்பினும் கவலை வேண்டாம். எந்த ஒரு தவறான முடிவுகளை எடுத்துவிட வேண்டாம் என்று டிவிட் பண்ணியிருக்கிறார்கள்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்