முகப்புகோலிவுட்

" 'மொழி'க்குப் பிறகு ஜோதிகா - ராதாமோகன் இணைவதில் மகிழ்ச்சி!" - சூர்யா ட்வீட்

  | March 02, 2018 12:19 IST
Tumhari Sulu Tamil Remake

துனுக்குகள்

  • ஜோதிகா கைவசம் 2 படங்கள் உள்ளது
  • வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’ படம் சூப்பர் ஹிட்டானது
  • இதன் தமிழ் வெர்ஷனை ராதாமோகன் இயக்கவுள்ளார்
‘மகளிர் மட்டும்’ படத்திற்கு பிறகு ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து ஜோதிகா மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஜோதிகா கமிட்டாகியுள்ளார்.

‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்கான இதனை ராதாமோகன் இயக்கவுள்ளார். வித்யா பாலன் நடித்திருந்த இதன் ஒரிஜினல் வெர்ஷன் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார்.
 
இதை பிரபல நடிகரும், ஜோதிகாவின் கணவருமான சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். வெகு விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்