விளம்பரம்
முகப்புகோலிவுட்

சூர்யா வெளியிட்ட உதயநிதியின் ‘நிமிர்’ ஃபர்ஸ்ட் லுக்

  | October 08, 2017 00:23 IST
Nimir Posters

துனுக்குகள்

  • இதில் உதயநிதிக்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்
  • மலையாளத்தில் மெகா ஹிட்டான படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’
  • இதன் டைட்டில் லுக்கை நடிகர் மோகன் லால் வெளியிட்டார்
தளபதி பிரபுவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் கெளரவ்வின் ‘இப்படை வெல்லும்’, ப்ரியதர்ஷனின் ‘நிமிர்’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘நிமிர்’ படத்தை ‘மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் சந்தோஷ் என்பவர் தயாரிக்கிறார். இந்த படம் கடந்த வருடம் ஃபகத் ஃபாஸில் நடிப்பில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ எனும் மலையாள படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காம்.

திலீஷ் போத்தன் இயக்கியிருந்த இப்படம் அங்கு மெகா ஹிட்டானது. தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ப திரைக்கதையில் மட்டும் சில மாறுதல்கள் செய்துள்ளனராம். உதயநிதிக்கு ஜோடியாக மலையாள நடிகை நமீதா புரமோத் டூயட் பாடி ஆடி வருகிறார். இன்னொரு ஹீரோயினாக மலையாளத்தில் அனுஸ்ரீ நடித்த வேடத்தில் பார்வதி நாயர் நடிக்கிறார். மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் - சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ள இதற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார், தர்புகா சிவா – அஜநீஷ் லோக்நாத் இசையமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இதன் டைட்டில் லுக்கை மலையாள சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர் மோகன் லால் வெளியிட்டார். தற்போது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்