முகப்புகோலிவுட்

ஒரே வாரத்தில் இத்தனைக் கோடியா? சாதனைப் படைக்கும் சூர்யாவின் என்.ஜி.கே!

  | June 07, 2019 10:17 IST
Ngk

துனுக்குகள்

  • செல்வராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • சாய் பல்லவி இப்படத்தில் நடித்திருக்கிறார்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இன்னும் பலர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “என்.ஜி.கே”.
 
கடந்த 31ல் நாடு முழுவதும் வெளியாகிய இப்படம் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. ஒரு வாரம் கடந்தும் மக்கள் கூட்டம் இப்படத்தை காண படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
 
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் பொருளதார ரீதியாகவும் தற்போது சாதனை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க சங்கம் திரைப்படம் வெளியாகி 7வது நாள் முடிவில் சுமார் 100 வசூலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
 
இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே ஆரவாரத்தை எற்படுத்தியுள்ளது. யுவசங்கர் ராஜா இசையில் பாடலாசிரியர் உமா தேவி அவர்களின் வரிகளில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பேரன்பே பாடலும் பல கோடி பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்து வருகிறது

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்