முகப்புகோலிவுட்

சூர்யாவின் 'NGK' பட பெயர்க் காரணம் இதுதானா?

  | March 06, 2018 13:06 IST
Nandha Gopalan Kumaran

துனுக்குகள்

  • நேற்று மாலை இதன் டைட்டில் ‘NGK’ என அறிவிக்கப்பட்டது
  • செல்வராகவனின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது
  • சூர்யா கேரக்டரின் பெயர் சுருக்கம் தான் தலைப்பு என கூறப்படுகிறது
‘சி 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம். வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது.

நேற்று (மார்ச் 5-ஆம் தேதி) படத்தின் டைட்டில் ‘NGK’ என அறிவிக்கப்பட்டு, இயக்குநர் செல்வராகவனின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, படத்தின் டைட்டிலுக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவின் பெயர் ‘நந்தகோபாலன் குமரன்’ என்றும், அதன் சுருக்கம் தான் தலைப்பு எனவும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்