விளம்பரம்
முகப்புகோலிவுட்

இசை உலகில் கால் பதிக்கும் நடிகர் சூர்யா

  | March 09, 2017 13:01 IST
Movies

துனுக்குகள்

  • 2D நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் நடிகர் சூர்யா
  • தற்போது 2D மியூஸிக் மூலம் இசை துறையிலும் கால் பதித்துள்ளார்
  • மகளிர் மட்டும் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்தார். இவருடைய சொந்த நிறுவனமான "2D எண்டர்டெயின்மெண்ட்” '36 வயதினிலே', ’24’ மற்றும் 'பசங்க-2' ஆகிய திரைப்படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றியை பெற செய்தார்.
நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படத்தை கிரிஸ் பிக்சர்ஸுடன் இணைந்து 2D நிறுவனமும் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இப்போது இசைத்துறையிலும் தனது காலடியை முன் எடுத்து வைத்துள்ளார். அதாவது 2D மியூஸிக் என்ற பெயரில் இசை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்நிறுவனம் பிரபல நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் இசை உரிமையை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் 2D மியூஸிக் நிறுவனம், தனது முதல் உரிமையாக 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் இசை உரிமையை பெற்றுள்ளது, மகளிர் தினமான நேற்று இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் 'அடி வாடி திமிரா' என்று தொடங்கும் பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்