முகப்புகோலிவுட்

“கத்துக்கறேன் தலைவரே” நன்றி தெரிவித்து சூர்யா நெகிழ்ச்சி!

  | June 07, 2019 16:18 IST
Suriya

துனுக்குகள்

  • செல்வராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • சாய் பல்லவி இப்படத்தில் நடித்திருந்தார்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இன்னும் பலர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “என்.ஜி.கே”.
 
கடந்த 31ல் நாடு முழுவதும் வெளியாகிய இப்படம் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. ஒரு வாரம் கடந்தும் மக்கள் கூட்டம் இப்படத்தை காண படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
 
 
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் பொருளதார ரீதியாகவும் தற்போது சாதனை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க சங்கம் திரைப்படம் வெளியாகி 7வது நாள் முடிவில் சுமார் 100 வசூலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். அதில்
 
“திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #NGKinTheatres #கத்துக்கறேன்தலைவரே” என பதிவு செய்திருக்கிறார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்