முகப்புகோலிவுட்

நேருக்கு நேர் மோதும் விக்ரம் – சூர்யா!

  | April 15, 2019 12:43 IST
Suriya

துனுக்குகள்

  • இயக்குநர் ராஜேஷ் செல்வா இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார்
  • ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்
தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கும் ‘கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.
5p8bg5to

நடிகரும், தற்போதைய அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.  ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தின் டீசர் ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
ka8sf6o8

இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி மே 31-ம் தேதி படம் ரிலீஸாகிறது. இதேதேதியில் செல்வராகன் இயக்கத்தில்  சூர்யா நடித்திருக்கும் - என்.ஜி.கே படமும் திரைக்கு வருகிறது. இதனால் விக்ரம் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். கமலின் இளைய மகள்  அக்‌ஷராஹாசன் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
t8p3o9j8


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்