முகப்புகோலிவுட்

இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் ‘NGK’

  | November 08, 2018 11:21 IST
Suriya

துனுக்குகள்

  • இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் என டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது
  • இந்த படம் சூர்யாவின் கேரியரில் 36-வது படமாம்
‘தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகு சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர். ‘NGK' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம்.

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவிற்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இம்மாதம் (நவம்பர்) இறுதியில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த ஷெடியூலுடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறதாம்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்