முகப்புகோலிவுட்

ரஜினியின் ‘பேட்ட’யை தொடர்ந்து சூர்யாவின் ‘NGK’

  | December 07, 2018 19:19 IST
Suriya

துனுக்குகள்

  • இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயி
  • இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்
  • இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது
‘தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகு சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர். ‘NGK' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம்.

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவிற்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்த படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இதே நிறுவனம் ரஜினியின் ‘பேட்ட' இசை உரிமையை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்