முகப்புகோலிவுட்

பிரம்மாண்ட செட்டில் சூர்யாவின் ‘NGK’ பட சண்டைக்காட்சி

  | July 20, 2018 12:49 IST
Ngk Shooting Update

துனுக்குகள்

  • சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதன் செகண்ட் லுக் போஸ்டரை ஜூலை 22-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • இந்த படத்தில் கலை இயக்குநராக விஜய் முருகன் பணியாற்றி வருகிறார்
'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகு சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர். 'NGK' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம்.

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவிற்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்காக சென்னையிலுள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் கலை இயக்குநர் விஜய் முருகன் பிரம்மாண்ட செட் அமைத்து வருகிறார். இந்த செட்டில் மிரட்டலான சண்டைக் காட்சியை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ஜூலை 22-ஆம் தேதியும், படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்