விளம்பரம்
முகப்புகோலிவுட்

காலில் விழுந்த நடிகர் சூர்யா – ஷாக்கான ரசிகர்கள்

  | January 11, 2018 12:41 IST
Tsk Pre Release Event

துனுக்குகள்

  • சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இப்படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது
  • மேடை ஏறிய ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுந்தனர்
‘சி 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், செந்தில், ‘நவரச நாயகன்’ கார்த்திக், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், மீரா மிதுன், கலையரசன், நந்தா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.

‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ள இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக், டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம்.
 
படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் (கேங்) நாளை (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் (சங்கராந்தி) ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் ப்ரீ-ரிலீஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 10-ஆம் தேதி) மாலை சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘TSK’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் சூர்யாவுடன் ‘சொடக்கு’ பாடலுக்கு நடனமாட சில ரசிகர்களை தொகுப்பாளினி அஞ்சனா அழைத்தார். மேடை ஏறிய ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுந்தனர். இதனையடுத்து சூர்யாவும் அவர்கள் காலில் விழுந்து ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்