முகப்புகோலிவுட்

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சென்சார் ரிசல்ட்

  | January 02, 2018 16:03 IST
Thaanaa Serndha Koottam Movie

துனுக்குகள்

  • சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் ஆடியோவை நாளை வெளியிடவுள்ளனர்
  • இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘சி 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், செந்தில், ‘நவரச நாயகன்’ கார்த்திக், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், மீரா மிதுன், கலையரசன், நந்தா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.

‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ள இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக், டீஸர் மற்றும் ‘நானா தானா – சொடக்கு – பீலா பீலா’ ஆகிய 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஆடியோவை நாளை (ஜனவரி 3-ஆம் தேதி)-யும், படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் (கேங்) வருகிற பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்