விளம்பரம்
முகப்புகோலிவுட்

சூர்யாவின் ‘TSK’ பரபர அப்டேட்ஸ்

  | June 28, 2017 13:05 IST
Thaanaa Serndha Koottam

துனுக்குகள்

  • சூர்யா கைவசம் 3 படங்கள் உள்ளது
  • முதன் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்
  • ‘நவரச நாயகன்’ கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்
ஹரியின் ‘சி 3’ படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு சூர்யா கால்ஷீட் டைரியில் விக்னேஷ் சிவனின் ‘தானா சேர்ந்தகூட்டம்’, செல்வராகவன் படம், ஹரி படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘போடா போடி, நானும் ரௌடி தான்’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ‘நவரச நாயகன்’ கார்த்திக் முக்கிய வேடமொன்றில் நடிக்கவுள்ளார்.

மேலும், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ், சுரேஷ் மேனன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜாவுடன் இணைந்து சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், படக்குழுவால் ட்விட்டப்பட்ட சூர்யாவின் புகைப்படம் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் அடுத்த கட்ட ஷெடியூல் இன்று (ஜூன் 28-ஆம் தேதி) முதல் சென்னையில் துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மைசூர் பறக்கவுள்ளது ‘TSK’ டீம். அங்கு சில முக்கியமான காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்