முகப்புகோலிவுட்

துவங்கியது ‘ஏஞ்சலினா’ பட ஷூட்டிங்

  | December 28, 2017 13:11 IST
Director Suseenthiran Movies

துனுக்குகள்

  • சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ‘ஏஞ்சலினா’
  • இப்படத்தில் சூரி மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘மாவீரன் கிட்டு’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதனையடுத்து சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ‘ஏஞ்சலினா’. புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தில் சூரி மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சாம்.சி.எஸ். இசையமைத்து வரும் இதற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவாளராகவும், தியாகு படத்தொகுப்பாளராகவும், ஜி.சி.ஆனந்தன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

‘ஆறாம் திணை ஃபிலிம்ஸ் – ஸ்ரீ சாய் சிரஞ்சீவி ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. ஏற்கெனவே, வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.
 
தற்போது, படத்தின் ஷூட்டிங் இன்று (டிசம்பர் 28-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் சுசீந்திரனே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்