விளம்பரம்
முகப்புகோலிவுட்

தமிழ் சினிமாவிற்கு நல்ல கதாசிரியர்கள் தேவை - நடிகர் ஜீவா பரபரப்பு பேட்டி

  | May 16, 2017 15:04 IST
Celebrities

துனுக்குகள்

  • இயக்குநருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்
  • 'ராம்' என் வாழ்நாளில் மறக்க முடியாத திரைப்படம்
  • எழுத்தாளர்களுக்கு தான் மக்களின் ரசனை புரியும்
நடிகர் ஜீவா நடிப்பில் புதுமுக இயக்குநரும் 'நடிகவேள்' எம்.ஆர்.ராதா அவர்களின் பேரனுமாகிய ஐக் இயக்கத்தில் `சங்கிலி புங்கிலி கதவதொற’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தான் அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா தனியார் செய்தி நிருவத்திற்கு அளித்த பேட்டியில்….

"தமிழ் சினிமா உலகம் மாறிக்கொண்டு வருகிறது. ஒரு முழு திரைப்படத்தையும் சின்ன பட்ஜெட்டுக்குள் இயக்கி அதனை வெற்றிப் பெற செய்யும் திறமையான இளம் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதனால் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முறை மாறிவிட்டது.

தமிழ் சினிமா உலகிற்கு நல்ல கதாசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தான் திரைப்படத்தின் பலமே. மக்களின் மனநிலையை புரிந்துக்கொண்டு ஒரு திரைப்படத்திற்குபடத்திற்கு தேவையான முழு கதையை எழுதுவது அவர்கள் தான். நடிகர்கள் ஆகிய நாங்கள் கதையை கேட்கிறோம், பிடித்திருந்தால் ஒப்புக்கொள்கிறோம். அவ்வளவு தான் எங்களுடைய பணி.
கதாசிரியருக்கும், இயக்குநருக்குமான சம்பள இடைவெளியை குறைக்க வேண்டும். பாகுபலி போன்ற மிகவும் பிரம்மாண்ட திரைப்படங்கள் தமிழிலும் வரவேண்டும். பொன்னியின் செல்வன், மருதநாயகம் போன்ற உண்மையான வரலாற்று கதைகள் நம்மிடம் அதிகம் உள்ளன.

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகமும் சமீபத்தில் கிடைத்தபிறகு கிராமிய கதைகளங்களில் நடிக்க அதிகமாக விரும்புகிறேன். இயக்குநர் அமீர் இயக்கிய `ராம் ‘போன்ற பெர்ஃபாமன்ஸ் சார்ந்த திரில்லர் கதை என்றால் நடிக்க தயாராக உள்ளேன். அதே போல் மாறுபட்ட கதையில் மாறுபட்ட கதாப்பாத்திரத்த்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது”. என்று கூறியுள்ளார்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்