முகப்புகோலிவுட்

தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வருமா?

  | April 13, 2018 12:59 IST
Tamil Cinema Strike

துனுக்குகள்

  • க்யூப், யு.எஃப்.ஓ கட்டணங்களை எதிர்த்து புதுப்படங்கள் வெளியாகவில்லை
  • மார்ச் 16 முதல் ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது
  • தியேட்டர் அதிபர்களை சந்திக்கிறது தயாரிப்பாளர் சங்கம்
க்யூப், யூ.எஃப்.ஓ, கேண்டீன், பார்க்கிங், ஆன்லைன் புக்கிங் கட்டணம் குறைப்பு எனப் பல்வேறு கோரிக்கைகலுக்காக, தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறது. இது குறித்து தியேட்டர் அதிபர்கள், டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அதனால், தமிழ் படங்களின் வெளியீடு நிறுத்தி வைத்திருப்பது இன்னும் தொடர்கிறது.

சமீபத்தில் க்யூப், யூ.எஃப்.ஓ ஆகிய டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்களுக்கு மாற்றாக ஏரோக்ஸ் டிஜிட்டல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். மற்ற நிறுவனங்கள் வசூலிப்பதைவிட 50% குறைவான தொகையை கட்டணமாக பெற்றுக் கொள்ள இருக்கிறது ஏரோக்ஸ். மேலும், இனிமேல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே இந்த மாஸ்டரிங் பணிகளை மேற்கொள்ள இருக்கிறதாம்.

இனி தியேட்டர் அதிபர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். இதற்காக இன்று (ஏப்ரல் 13) தி.நகர் ஆந்திரா க்ளப்பில் கலந்துரையாடல் கூட்டத்தை மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்ட்ரைக் முடிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்