முகப்புகோலிவுட்

"படம், பாட்டு, டீசர், ஷூட்டிங் எதுவும் கிடையாது" தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

  | March 13, 2018 19:16 IST
Tamil Film Producers Council

துனுக்குகள்

  • க்யூப், யு.எஃப்.ஓ கட்டணங்களை எதிர்த்து புதுப்படங்கள் வெளியாகவில்லை
  • மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு
  • திரைப்படப் பணிகளை நிறுத்த தயாரிப்பாளர் சங்கமும் முடிவெடுத்துள்ளது
க்யூப், யு.எஃப்.ஓ ஆகியவற்றின் அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க கோரி மார்ச் 1 முதல் எந்தப் புதுப் படங்களையும் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் சொன்னதன்படி தமிழில் எந்தப் புதுப் படமும் வெளியாகவில்லை. அதைத் தொடர்ந்து கேளிக்கை வரி ரத்து, தியேட்டர் புதுப்பித்தல், பராமரிப்பு ஆகிய கோரிக்கைகளுக்கு அரசாணை பிறப்பிக்கக் கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் புரொஜக்டர் கட்டணம், ஆன்லைன் டிக்கெட், தியேட்டர் தட்டுப்பாடு என சில கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 16 முதல் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் ஆகிய பணிகளை நிறுத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நேற்று தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்களின் சிறப்பு கூட்டத்தில் ஏக மனதாக எடுக்கப்பட்ட முடிவின் படி வெள்ளிக்கிழமை (16.3.2018) முதல் சென்னையில் தமிழ் மற்றும் பிற மாநிலப் படப்பிடிப்புகள் நடத்தப் போவதில்லை என்றும் மார்ச் 23 முதல் வெளியூர், வெளி மாநில, வெளிநாதுகளிலும் படப்பிடிப்புகள் போவதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திரைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை என்கிற முடிவும் தொடரும் என்பதையும், சினிமா சம்பந்தப்பட்ட இசை வெளியீடு, டீசர் வெளியீடு, திரைப்படம் சம்பந்தமாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது என எதுவும் நடக்காது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்