இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : ‘கபாலி, காலா vs 2.0' ஒப்பீடும் அவதூறும்… இணையத்தில் பரபரக்கும் விவாதம்!