முகப்புகோலிவுட்

நடிகர் சங்கத் தேர்தல் அதிரடி திருப்பம்.. !

  | May 15, 2019 11:17 IST
Tfpc

துனுக்குகள்

  • நடிகர் சங்கத்தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்
  • நாசர் நடிகர் சங்கத்தலைவராக இருந்தார்
  • இதன் செயலாளராக விஷால் இருந்தார்
நடிகர் சங்கத்தில் தற்போது அனைவரின் பதவிக்காலமும் முடிந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடைபெறவிறுக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது

ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, அந்த 6 மாதகால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இன்று நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடிகர் ராஜேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி, சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக கூடிய இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்