முகப்புகோலிவுட்

காஞ்சனா 3 படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்; அதிர்ச்சியில் படக்குழு!

  | April 20, 2019 12:41 IST
Kanchana 3

துனுக்குகள்

  • ராகவா லாரன்ஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஓவியா, வேதிகா இப்படத்தில் நடித்திருக்கின்றனர்
  • கோவை சரளா இப்படத்தில் நடித்திருக்கிறார்
ராகவா லாரன்ஸின் முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று வெளியான காஞ்சனா 3 படங்களோடு நான்கு பாகங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
 
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, பிரியதர்ஷினி, இன்னும் பலர் நடித்திருந்தனர்.  நேற்று வெளியான இப்படம் காலை முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
நேற்று திருநங்கைகளை கௌரவிக்கும் விதமாக திருநங்கைகளுக்கு சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலைளில் தமிழ் சினிமாவிற்கு இன்றுவரை சவாலாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ் வலைதளன் படம் வெளியான சில மணி நேரங்களிலே இந்த படத்தை தனது வலைதளபக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
 
தமிழ் ராக்கர்ஸ் போன்ற வலைதளபக்கங்களிலால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விரைவில் இது போன் வலைதளங்களை முடக்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்