முகப்புகோலிவுட்

டொனால்ட் ட்ரம்பையும் விட்டுவைக்காத ‘தமிழ்ப்படம் 2.0’ குழுவினர்!

  | June 13, 2018 11:10 IST
Tamizh Padam 2

துனுக்குகள்

  • தமிழ்ப் படம் 2.0’ குழுவினர் ஒரு ஃபோட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளனர்
  • இத்திரைப்பட இயக்குனர் C.S.அமுதனுக்கு புகழாரங்கள் சூட்டப்பட்டுள்ளது
  • எல்லா படத்தையும் ஸ்பூஃப் செய்திருக்கிறார்கள் என தெரிந்தது
இந்த வருடத்திலேயே சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என சொல்லுமளவிற்கு, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘தமிழ்ப்படம் 2.0’ கடந்த 8 ஆண்டுகளில் எத்தனையோ மொக்கை படங்கள் வெளியாகியிருக்கின்றன; அவற்றில் எவற்றையெல்லாம் கலாய்த்து இருக்கிறார்கள், எப்படியெல்லாம் கலாய்த்து இருப்பார்கள் என்கிற ஆர்வத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் பேராவலோடு காத்திருக்கிறார்கள்.

படத்தின் டீசரிலேயே தமிழக அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபொழுது அழுதுகொண்டே பதவியேற்றது முதல் விஜய் மல்லையா வரை கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள். 'விவேகம்' பட கிளைமாக்ஸ் பாடல், 'ஆம்பள' படத்தில் சுமோ பறக்கும் காட்சி முதல் 'மெர்சல்' 'மங்காத்தா' 'விக்ரம் வேதா' துப்பறிவாளன்' '24' 'வேலையில்லா பட்டதாரி' 'துப்பாக்கி' ‘Hannibal Lecter’ வரை எல்லா படத்தையும் ஸ்பூஃப் செய்திருக்கிறார்கள் என தெரிந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் கூட விட்டுவைக்காமல் தங்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட சில சர்வதேச தலைவர்களுடன் சற்று வேடிக்கையான போஸில் உட்கார்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இன்று கிண்டல் செய்யப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட, அதே போஸில் சிவா அமர்ந்து ஹீரோயினுடன் பேசும் ஒரு படத்தை ‘தமிழ்ப் படம் 2.0’ குழுவினர் வெளியிட்டு வைரல் ஆக்கிவிட்டனர்.
இன்று காலை இந்த புகைப்படம் இண்டர்நெட்டில் வெளியாக, மாலைக்குள்ளேயே சூட்டோடு சூடாக ‘தமிழ்ப் படம் 2.0’ குழுவினர் ஒரு ஃபோட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளனர். ‘மீம் கிரியேட்டர்ஸை விட ரொம்ப வேகமா இருக்கீங்களேப்பா’ என சமூக வலைதளங்களில் இத்திரைப்பட இயக்குனர் C.S.அமுதனுக்கு புகழாரங்கள் சூட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும், நாளுக்கு நாள் ரசிகர்களிடையே கூடிக்கொண்டே போகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்