முகப்புகோலிவுட்

விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கி, நடித்துள்ள குறும்படத்தின் டீசர்

  | September 24, 2018 14:03 IST
Sanjay

துனுக்குகள்

  • விஜய் கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஒரு குறும்படத்தை இயக்கி, நடித்துள்ளார்
  • ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து சஞ்சய் நடனமாடியிருந்தார்
கோலிவுட்டில் பிரபல நடிகரான விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் அட்லியின் ‘மெர்சல்’. தற்போது, ‘சர்கார்’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இதனையடுத்து விஜய்யின் 63-வது படத்தை அட்லி இயக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜங்க்ஷன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் இயக்குநரும் சஞ்சய் தானாம்.
 

இக்குறும்படத்தின் டீசர் ரிலீஸாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கெனவே, ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் விஜய்யுடன் சேர்ந்து சஞ்சய் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்