முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி படத்தில் தாய்லாந்து ஸ்டன்ட் மாஸ்டர்

  | May 03, 2018 12:25 IST
Vijay Sethupathi Next Film

துனுக்குகள்

  • விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணியில் உருவாகவிருக்கும் 3-வது படம்
  • இதற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்
  • இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் S.U.அருண்குமார். இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதனையடுத்து அருண்குமார் இயக்கிய ‘சேதுபதி’ படத்திலும் விஜய் சேதுபதியே கதையின் நாயகனாக நடித்திருந்தார். இவ்விரு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, அருண்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவுள்ளாராம். இதில் விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரவுள்ளாராம். மேலும், முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா, லிங்கா ஆகியோர் நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இதற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் ‘YSR ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘கே புரொடக்ஷன்ஸ்’ ராஜராஜன் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில், படத்திற்கான பூஜை போடப்பட்டது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை மலேசியா மற்றும் தென்காசியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளுக்காக தாய்லாந்து ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் பணியாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்