முகப்புகோலிவுட்

ஸ்டைலிஷ் ஸ்டாருடன் மோத ஆயுத்தமாகிய ‘சி3’ பட வில்லன்

  | November 14, 2017 13:28 IST
Naa Peru Surya Movie

துனுக்குகள்

  • இதில் ஸ்டைலிஷ் ஸ்டாருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்
  • தாகூர் அனுப் சிங் நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளாராம்
  • இப்படத்தை ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
டோலிவுட்டில் ஹரிஷ் ஷங்கரின் ‘துவ்வாடா ஜெகந்நாதம்’ (DJ) படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் கைவசம் வக்கந்தம் வம்சியின் ‘நா பேரு சூர்யா’ மற்றும் இயக்குநர் லிங்குசாமியின் புதிய படம் உள்ளது. இதில் ‘நா பேரு சூர்யா’ படத்தில் ஸ்டைலிஷ் ஸ்டாருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் டூயட் பாடி ஆடி வருகிறார்.

‘சூப்பர் ஹீரோ’ சரத்குமார் மிரட்டலான வில்லனாகவும், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விஷால் – ஷேகர் இணைந்து இசையமைத்து வரும் இதற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ராமலக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
 

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ‘சி3’ படத்தில் நடித்த தாகூர் அனுப் சிங் நெகட்டிவ் ஷேடில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் நேற்று (நவம்பர் 13-ஆம் தேதி) முதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம். இதை தாகூர் அனுப் சிங்கே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்