விளம்பரம்
முகப்புகோலிவுட்

தல எனும் மந்திரச்சொல் – சிறிய ஃபிளாஷ்பேக்

  | May 01, 2017 22:58 IST
Ajith Films

துனுக்குகள்

  • அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார்
  • இளம் பெண்களின் மனதில் காதல் மன்னனாக இடம்பிடித்தார்
  • வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழவில்லை
இன்றைய திரையுலகில் தன்னம்பிக்கை நடிகராக ஜொலிக்கும் தல என்று எல்லோராலும் அன்போடும் தன் ரசிகர்களால் கர்வத்துடனும் அழைக்கப்படும் அஜித் குமார்க்கு இன்று பிறந்த நாள்.

''என் வாழ்க்கையிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமுஷமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானா செதுக்குனதுடா'' என்று 'பில்லா 2' திரைப்படத்தில் ’தல‘ அஜித் வசனம் ஒன்றை பேசியிருப்பார். அந்த வசனம் தான் அவரின் வாழ்க்கையும் கூட.

திரைப்பட வசனத்திற்கும், வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் வாழும் நடிகர் அஜித் என்பதைத் தெரிந்துகொள்ள அஜித் வரலாறை கொஞ்சம் புரட்டியே ஆக வேண்டும்.
பைக் மெக்கானிக் டூ சினிமா:-

தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்டு பொருளாதார பிரச்னைகளுக்காக தல அஜித் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். பைக், கார் மீது அவருக்கு ஏற்பட்ட தீராக் காதலால் ரேஸ்களில் கலந்துகொண்டார். ரேஸில் கலந்துகொள்ள போதிய பணம் இல்லாததால் சின்னச் சின்ன விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

முதல் நாடகம் :-

அப்போது பொதிகை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ஒரு நாடகத்திலும் நடித்தார், ஒல்லியான தேகம், அரும்பு மீசை என இவரா அஜித் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு இருந்த அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

முதல் படம்: -

1991 ஆம் ஆண்டு தெலுகு திரைப்படத்திம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் சோதனைகாலமாக அப்படத்தின் இயக்குநர் மரணம் அடைந்தார். அதன் பின் 1992 ஆம் ஆண்டு 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுகுப் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி 1993-ல் 'பிரேம புஸ்தகம்' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுகத்திற்கான விருது இவருக்கு கிடைத்தது.

தமிழ் திரையுலகிற்கு அறிமுகம்:-

அதே 1993 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் இயக்குநர் செல்வா இயக்கத்தில் அஜித் நடித்த 'அமராவதி' என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆனது. முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

ஆனாலும் மனதை தளரவிடமால் அடுத்தடுத்து 'பாசமலர்கள்', 'பவித்ரா', 'ராஜாவின் பார்வையிலே' போன்ற படங்களில் நடித்து வந்தார்

ஆசை:-
 
ajith

இயக்குநரும் பத்திரிக்கையாளருமான வஸந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'ஆசை' திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அஜித்தை தமிழ் சினிமா உலகம் ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்ட தருணம் இது.

அதில் இடம்பெற்ற மீனாம்மா என்ற பாடல் அன்றைய இளைஞர்களின் ஃபேவரட் சாங். இத்திரைப்படம் வெளி வந்த பிறகு இளம்பெண்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது, உங்களுக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு அதிகமானோரின்  கைகள் அஜித் திரைப்பட போஸ்டரை நோக்கி நீண்டது.

காதல் கோட்டை , காதல் மன்னன் :-
 
ajith

1996 முதல் 1998 வரை காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் ஆகிய திரைப்படங்கள் அஜித்தின் திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைந்தன. ஆசை நாயகனாக வலம் வந்துக்கொண்டிருந்த அஜித் இளம் பெண்களின் காதல் நாயகனாகவும், ஆக்‌ஷன் கதாநாயகனாகவும் மாறிய காலகட்டம் இது.

காதல் கோட்டை திரைப்படத்தில் தேவையானியை பார்க்காமல் காதலிக்கும் காட்சிகளாகட்டும், அவள் வருவாளா திரைப்படத்தில் சிம்ரனை காதலிக்க துரத்தும் காட்சிகளாக இருக்கட்டும், காதல் மன்னன் திரைப்படத்தில் நிச்சயதார்த்தமான கதாநாயகியை பார்த்தவுடன் காதலில் விழும் காட்சிகளாகட்டும் இவை அனைத்தின் மூலமும் அன்றைய இளம் பெண்களின் மனதில் காதல் மன்னனாக இடம்பிடித்தார் என்று சொன்னால் அது மிகையாகது.

வாலி:-
 
ajith

தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் வேலையில் திடிரென ஒரு அறிவிப்பு அஜித் புது முக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வாலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதில் இரட்டை வேடங்கள் எனவும் அதில் ஒன்று வில்லன் என்று செய்திகள் வெளிவர திரையுலகமே அதிர்ச்சியானது ஏன் நல்ல தான் நடிச்சிக்கிட்டு இருக்கான் இந்த பையன் ஏன் இப்படி தப்பா முடிவு எக்குறானு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகி கோலிவுட் உலகமே முனங்கிக்கொண்டிருக்க 1999 ஆம் ஆண்டு படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

திறமையான நடிகன் என்ற பெயரை இப்படம் பெற்றுக்கொடுத்து விமர்சித்தவர்களை விழிப்பிதுங்க வைத்தது.

'வாலி', 'அமர்க்களம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்கள் மூலம் மிகவும் அழுத்தமான நடிகர் என்ற முத்திரை தமிழ் திரையுலகில் பதித்தார்.
'முகவரி', 'பூவெல்லாம் உன் வாசம்', 'சிட்டிஸன்', 'அட்டகாசம்', 'வில்லன்', 'வரலாறு', 'பில்லா', 'கிரீடம்', 'மங்காத்தா', 'வீரம்', 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்', வேதாளம் என இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களின் வெற்றிப் பட்டியல் நீள்கிறது.

’தல’ என்கிற பட்டம்:-
 
ajith

தன் திரையுலகில் வெற்றி தோல்விகள் என்று மாறி மாறி வந்துக்கொண்டிருந்தாலும் 2001 ஆம் ஆண்டு ஒரு புதுமுக இயக்குநர் இயக்கத்தில் தீனா என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் தல இருக்கும்போது வாலு ஆடக்கூடாது என்று அன்று முதல் அஜித் அவர்களின் பெயரில் தல என்ற பெயரும் இணைந்தது.

அந்த வெற்றி படத்தின் இயக்குநர் வேறு யாரும் இல்லை இன்றைய பிரம்மாண்ட இயக்குநர் முருகதாஸ் தான்.

ஏன் அஜித்தை கொண்டாடுகிறார்கள்?

அஜித் தொட்டதெல்லாம் மிகப்பெரிய வெற்றியடவில்லை. வெற்றிப் படங்களை மட்டுமே தந்து தயாரிப்பாளர்களின் வசூல் சக்கரவர்த்தியாக திகழவில்லை. ஆனால், அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து திரையுலகமே கொண்டாடுகிறது. அதற்கு காரணம், அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார். அது எப்படி என்பதை நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் தான் இந்த கட்டுரை படிக்க வேண்டும்.

அறிமுக இயக்குநர்களின் தோழன்:-

தல அஜித் நடிப்பில் பல படங்கள் தோல்விகளைச் சந்தித்தன. தனது ஆசையான கார் ரேஸ் கவனத்தையும் திருப்பி திரையுலகில் மட்டும் முழு மூச்சாக களம் இறங்கினார்.
தான் வேலைப்பார்த்த படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களை இயக்குநராக்கி அழகு பார்க்கவும் அஜித் முடிவெடுத்தார்.இன்றையை பெரும்பாலான முன்னணி இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பை முதலில் கொடுத்தது அஜித் தான்.

இயக்குநர் சரணின் முதல் திரைப்படம் 'காதல் மன்னன்'.
இயக்குநர் ஜே.டி.ஜெர்ரியின் முதல் படம் 'உல்லாசம்'.
இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவுக்கு முதல் படம் 'வாலி'.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படம் 'தீனா'.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடன் முதல் படம் 'கிரீடம்'.
இயக்குநர் ரமேஷ் கண்ணாவின் முதல் படம் 'தொடரும்'.
இயக்குநர் ராஜூ சுந்தரத்தின் முதல் படம் 'ஏகன்'.
இயக்குநர் சிங்கம் புலியின் முதல் படம் 'ரெட்'.
'ராசி', 'ஆழ்வார் ' என்று பல திரைப்படங்கள் அறிமுக இயக்குநர்கள் படங்கள்தான்.

ஈகோ இல்லாத நடிகர்:-
 
ajith

'பாசமலர்கள்' திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடனும், 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படத்தில் இளையதளபதி விஜய்யுடனும் தல அஜித் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு தல அஜித்தும், பிரசாந்தும் 'கல்லூரி வாசல்' திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

'உல்லாசம்' திரைப்படத்தில் ’தல’ அஜித்தும்,’சியான்’ விக்ரமும் இணைந்து நடித்தனர்.

'பகைவன்' திரைப்படத்தில் அஜித் – புரட்சி தமிழன் சத்யராஜ் இணைந்து நடித்தனர்.

'நீ வருவாய் என' திரைப்படத்தில் பார்த்திபன் - அஜித் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

'ஆனந்த பூங்காற்றே', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' ஆகிய திரைப்படங்களில் அஜித்தும் – கார்த்திக்கும் இணைந்து நடித்தனர்.

'தீனா' திரைப்படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, 'மங்காத்தா' திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், 'ஆரம்பம்' திரைப்படத்தில் ஆர்யா, ராணா டகுபதி 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அருண் விஜய் என அஜித்துடன் நடித்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது

ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிட்ற மாதிரி:-

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரையுலகிற்கு வந்த அஜித் தோல்வியைக் கண்டு என்றுமே கலங்கியதில்லை. தனது முதுகுத் தண்டில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்த போதிலும் சண்டைக் காட்சிகளில் அவர் என்றுமே ரிஸ்க் எடுக்கத் தயங்கியதுமில்லை.

விபத்து ஏற்பட்டதால் அஜித் உடல் எடை கூடியது. ஆனால், மனம் வருந்தாமல் உடல் எடையை வெகுவாக குறைத்தார்.
'ஆரம்பம்' திரைப்படத்தின் போது கூட சண்டைக்காட்சியில் அவர் காலில் அடிபட்டு ஆப்ரேஷன் செய்யும் அளவுக்கு அஜித் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம் பிடிக்காதவர்: -

தன் திரைப்படமாக இருந்தாலும் இசை வெளியீடு, பத்திரிக்கையாளார் சந்திப்பு, வெற்றி விழா என எந்த ஒரு நிகழ்விலும் கலந்துகொள்ளாதவர் அஜித். என் படத்தை ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்று கூட என்றும் சொல்லியதில்லை.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்