முகப்புகோலிவுட்

திருவிழா சாதியை ஒழிக்குமா? - “விஸ்வாசம்” என்ன சொல்கிறது...

  | January 11, 2019 13:27 IST
Viswasam Review

துனுக்குகள்

  • இன்று விஸ்வாசம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
  • ரசிகர்கள் மத்தியில் விஸ்வாசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
  • விஸ்வாசம் கொண்டாட்டத்தில் தமிழகம்
இயக்குனர் சிவா மற்றும் அஜித் இணைந்திருக்கும் நான்காவது கூட்டணி “விஸ்வாசம்”. இன்று  தமிழகம் முழுவதும் எல்லா திரையரங்கையும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. விஸ்வாசத்திற்கு போட்டியாக ரஜினியின் பேட்டையும் களம் இறக்கப்பட்டிருக்கிறது. இரண்டு படங்களுமே தமிழகத்தை திருவிழாவாக்கியிருக்கிறது என்றும் சொல்லாம்.
 
குடும்பமாக பார்க்கக் கூடிய படமாக இந்த பொங்கலை அலங்கரித்து இருக்கிறார் சிவா. ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம், என மூன்று படங்கள் அஜித்தை வைத்து சிவா இயக்கி இருந்தார். மூன்றும் குடும்ப கதைதான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  நான்காவதாக இணைந்திருக்கும் இந்த படத்தில் புதிதாக சிவா என்ன செய்திருக்கிறார் என்றால் ஒன்றும் இல்லை, அதே குடும்ப கதைதான்.  களம்தான் வேறு.
 
mq1tjrgg

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது. அப்படி இந்த ஆண்டும் திருவிழா நடக்க அனுமதி கேட்டு ஊர் மக்கள் வட்டாச்சியரை சந்திக்கின்றனர்.
 
அப்படியெல்லாம் நடத்த கூடாது என்று சொல்ல ஊரில் ஒரு கும்பல் இருக்கத்தானே செய்யும், ரகளை நடக்கும் அந்த இடத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் அஜித். அவ்வளவு பில்டப் தேவைதானா என்று கேட்கலாம்.  ஊரில் அவ்வளவு பெரிய தலகட்டுக்கு இதை கூட செய்யவில்லை என்றால் ஊர் மக்களே கோபித்துக்கொள்வார்கள்.

மேலும் படிக்க - அடிச்சித் தூக்கிய "தல"
 
m0v9k9a

 ஊரின் பெரிய தலகட்டாக இருக்கும் தூக்குதுறை (அஜித்) வட்டாச்சியரிடம் பேசும் போது திருவிழா எதற்கு நடக்க வேண்டும் என்பதற்கு படிப்படியாக சில காரணங்களை அடுக்குகிறார். நம்பமுடியாத பெரும் பொய்யை சொல்கிறார் அதுதான் மனதை வேதனை அடையச்செய்கிறது. அது என்னவென்றால் “சாதியா பிரிந்து கிடப்பவர்கள் கூட திருவிழா நேரத்தில் சாமிக்காக ஒன்றாக நிற்பார்கள் என்று” இந்த வசனத்தை யோசித்துதான் வைத்தார்களா என்பது இன்னும் புரிந்து கொள்ளமுடியவில்லை.
 
சாமியே இங்கு சாதியாகதான் பிரிந்து கிடக்கிறது. அவன் அவன் சாதிக்கு ஒரு சாமி வைத்து திருவிழா நடத்தி வருகிறார்கள்.  அப்படி இருக்கும் போது இவர் சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. அதை தவிற அவர் சொன்ன மற்ற காரணங்கள் எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடுதான்.
ஊரே கொண்டாட்டத்தில் இருக்க தூக்குதுறை மட்டும் துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க - "விஸ்வாசமும் தமிழ்ராக்கர்ஸில் வெளியானது! - அதிர்ச்சியில் திரையுலகம்!"
 
rp5afnl8

 தூக்குதுறையின் அப்பத்தா “யெப்பா சிரிப்பு வேற சந்தோஷம் வேற தெரிஞ்சிக்கிற வயசு எனக்கு ஆயிடுச்சுப்பு, நீ சிரிக்கிற ஆனா சந்தோஷமா இல்லை” னு அப்பத்தா சொல்லும் போது தூக்குதுறையின் முகத்தில் இருக்கும் வேதனையை நமக்குள் கடத்துகிறார்.
 
கிட்ட த்தட்ட நடக்கும் சம்பவங்கள் எதுவும் நிஜம்  இல்லை, எல்லாம் கற்பனை என்றாலும் காதல், திருமணம் ரவுடித்தனம், அன்பு, சொந்தம், அடாவடி என்று நிஜக்கதைகளையும் சினிமா மொழியில் சிறப்பாக பேசியிருக்கிறார் இயக்குனர் சிவா.
 
இந்த படத்தில் எந்த இடத்திலும் இவரை பார்ப்பதை மிஸ் பண்ணிடக்கூடாது என்பது போலவே விஸ்வாசம் குழுவில் இணைந்திருக்கிறார் நயன்தாரா.  இந்த படத்தின் மொத்த பலமும், பலவீனமும் நயன்தாராதாங்க.
 
அவ்வளவு அழகு, நேர்மையான திமிரு, கொஞ்சும் காதல், கொஞ்சம் ரொமான்ஸ் என்று வேற அளவில் படம் முழுவதும்  ரசிக்க வைத்திருக்கிறார்.
 
திருமணம் நடப்பதற்கு முன்பு போடும் சண்டைகளை விட தூக்குதுறை திருமணத்திறகு பிறகு போடும் சண்டைகள் மொத்த படத்தின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது.
 
இதனால்தான் என்னவோ கொஞ்சம் கூட யோசிக்காமல் உன்னோடு வாழ முடியாது என்று கைக்குழந்தையோடு நயன்தாரா பாம்பேவிற்கு  போகும் போது அவ்வளவு ரவுடித்தனம் செய்த தூக்குதுறை ஒன்றும் பேசாமல் அமைதியாய் நிற்பது திரையரங்கை அப்படியே அமைதியாக்குகிறது.
 
தந்தை, மகள் பாசம், பொண்டாட்டியிடம் திட்டு வாங்குவதையும்  மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் அஜித்தின் மனநிலை என ஒரு குடும்ப உறவுக்கான எல்லா உரையாடலையும் பூர்த்தி செய்திருக்கிறார் சிவா.
 
lsuueflg

வில்லனாக நடிக்கும் ஜெகபதி பாபுவிற்கு கொடுக்கப்படும்  மாஸ் காட்சிகளுக்கும், அவருக்கு இந்த சமூகத்தில் இருக்கும் அந்தஸ்த்துக்கும் தூக்குதுறையின் பெண்ணை கொல்ல முயற்சிக்க சொல்லும் காரணங்கள் எல்லாம் பழைய பீங்கான் தட்டை தூசி தட்டி துடைத்து வைத்திருப்பது போல் இருந்தது. இருந்தாலும் அவர் மாஸான வில்லன் என்பதை நிரூபித்து இருக்கிறார்.  சண்டை காட்சிகள் உட்பட நடனத்திலும் அஜித் ரசிகர்களை அள்ளுகிறார்.  தேவை இல்லாத இடங்களில் திடீர் திடீரென பாடல்கள் வருவதாக தெரிந்தாலும் எல்லா பாடல்களும் அருமை. குறிப்பாக தந்தை மகள் பாசத்தை சொல்லும் பாடல் கடைசி வரை படம் முடிந்து வெளியில் வரும் போதும் முனுமுனுக்க வைக்கிறது. ரோபோ சங்கர், தம்பி ராமையா இருவரையும் இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. விவேக் ஏன் வந்தார் என்றும் சில இடங்களில் யோசிக்க வைக்கிறது.
 
b6frrlmo

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஹீரோவாகவும், வில்லனாகவும் அசத்தியிருக்கிறார் அஜித்.  குடும்பமாக சென்றால் அழுகையும், சிரிப்பையும், பாசத்தையும் நிச்சயம் பார்த்துவிட்டு வரலாம்.

மேலும் படிக்க - "பேட்ட விமர்சனம்"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்