முகப்புகோலிவுட்

விஸ்வாசத்தின்.. விஸ்வாசம்..

  | January 07, 2019 17:20 IST
Ajith

2014 , ஜனவரி 10ல் "வீரம்" மூலமாக இணைந்த அஜித் - சிவா கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் நான்காவது படமாக "விஸ்வாசம்" வரை கைகோர்த்து வந்துள்ளது.

பெரும்பாலும் பொங்கல் ரேஸ் என்றால் அதில் பெரிய நடிகர்களுடன் மோதுவது தான் தலயின் வழக்கம். இந்த வருடம் அதன் உச்சகட்டமாக சூப்பர் ஸ்டாரின் "பேட்ட" யுடன் மோதுவதால் தமிழ்நாடே ஜனவரி 10-ம் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ரஜினியின் அளவிற்கு மிகப்பெரிய மார்க்கெட் இல்லையென்றாலும் ஓப்பனிங்கில் சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தனக்கு உள்ள ரசிகர் பட்டாளத்தோடு வருகிறது தல அஜித்தின் "விஸ்வாசம்'.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் கொடுக்கும் நடிகர் என்றால் அது "தல" அஜித் குமார் தான். வசூல் ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும் அஜித் அவர்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருப்பதற்கு காரணமும் உண்டு. மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல் யார் இயக்குனர், யார் யார் கூட்டணி என்றெல்லாம் அவரின் ரசிகர்கள் பார்ப்பதில்லை. எத்தனை ஆண்டு கழித்து அவர் படம் ரிலீஸ் ஆனாலும் அவர்கள் கவலைப்பட போவதும் இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பதும், காத்திருப்பதும் திரையில் வரும் ஒற்றை பெயர் "அஜித் குமார்" என்பதற்காகவும், ஒற்றை முகம் "தல" என்பதற்காகவும் தான். இத்தனைக்கும் அஜித் அவர்கள், அவரது ரசிகர்களுக்கு தன் நடிப்பை தவிர வேறு எதையும் பெரிதாக கொடுத்து விடவில்லை. இருந்தாலும் அவ்வளவு பெரிய ஓப்பனிங்கிற்கு காரணம் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் "விஸ்வாசம்" தான். அவர்களின் விஸ்வாசத்திற்கு கைமாறாக அவர் கொடுக்க போவது தான் ஜனவரி 10ல் வெளியாகவிருக்கும் தலயின் "விஸ்வாசம்"
 
b6frrlmo


சரியாக நான்கு ஆண்டுக்கு முன் 2014 , ஜனவரி 10ல் "வீரம்" மூலமாக இணைந்த அஜித் - சிவா கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் நான்காவது படமாக "விஸ்வாசம்" வரை கைகோர்த்து வந்துள்ளது. இந்த கூட்டணியை பலர் விமர்சித்தாலும், வசைபாடினாலும் ஒவ்வொரு முறையும் தங்கள் படங்களால் பதில் சொல்லி இருக்கின்றனர். வீரத்தில் "அன்பான அஜித்”, வேதாளத்தில் "அராத்தான அஜித்", விவேகத்தில் "அல்டிமேட் அஜித்" என ஒவ்வொரு முறையும் புது விதமான தலயை காட்டும் "சிறுத்தை"சிவா, இந்த முறை "அலப்பறையான அஜித்" யை காட்டப்போவது விஸ்வாசத்தின் சிறப்பு. அஜித்தின் முந்தைய காலங்களில் இருந்த கலகலப்பான, துடிப்பான நடிப்பை அவர் மாஸ் நடிகரான பின்பு ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் பலருக்கு இருந்தது. அதற்கு தீனியாக விஸ்வாசம் படம் இருக்கும் என சிவா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
 
60eihung

இந்த படம் அஜித் அவர்களை முன்பை விட அதிகமாக ஃபேம்லி ஆடியன்சிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் மாற்று கருத்தும் இல்லை. இதுவரை பார்த்த படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் தல இன்னும் ஃபிரஷாகவும், எனர்ஜியாகவும் இருப்பது ட்ரைலரில் நன்றாகத் தெரிகிறது. அஜித் - சிவா கூட்டணியில் வந்த படங்களிலே சிறந்த படம் இது தான் என்று சிவா பல இடங்களில் கூறுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அஜித் - நயன்தாரா எப்போதெல்லாம் இணைகிறார்களோ அப்போதெல்லாம் பெரும்பாலும் ஹிட் அடித்துள்ளனர். அதை தவிர இருவரும் அவரவர் சிறு சறுக்கல்களில் இருந்து ஒரே நேரத்தில், ஒரே படத்தில் "பில்லா" மூலம் ஹிட் கொடுத்து கம்பேக் கொடுத்ததால், இவர்களின் ஹெமிஸ்ட்ரி எப்போதும் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். டி.இமான் இசையில் பாடல்கள் மாஸ் + கிளாஸ் கலந்து இருப்பது போல் படமும் அதுபோல் தான் இருக்குமென எண்ண வைக்கிறது. படம் மாஸ் ஆனா எமொஸ்னல் படம் என இமான் கூட சில இடங்களில் கூறியிருக்கிறார்.
 
rp5afnl8

மற்ற படங்களைவிட எப்போதும் அஜித் அவர்களின் வசனங்கள் சிவா படங்களில் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும். உதாரணமாக.. “நீ தலீத்னு நினைச்சா நான் தலீத், நீ தேவன்னு நினைச்சா நான் தேவன்....”, "கூட இருக்குறவங்கள நாம பார்த்துகிட்டா, மேல இருக்குறவன் நம்மல பார்த்துக்குவான்....", “எண்ணம் போல் வாழ்க்கை"னு பல வசனங்கள் அஜித் எனும் நடிகனை தாண்டி அஜித் எனும் எதார்த்த மனிதனை திரையில் கொண்டு வந்திருக்கும். விஸ்வாசம் படத்தை பொருத்தவரை அதன் போஸ்டர், ட்ரைலர் அனைத்தும் ஒரு திருவிழா பார்க்கும் மனநிலையை செட் செய்கிறது. இது உறவுகளைப் பேசும் படமாக இருக்கப் போவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் டிரைலரின் மறு பாதியில் வரும் மாஸ் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு ஆரவார மனநிலையை செட் செய்கிறது. முதல் மூன்று , நான்கு நாட்கள் ரசிகர்கள் விஸ்வாசத்தை கொண்டாடினாலும், அடுத்த இருவாரங்கள் ஃபாம்லி ஆடியன்சால் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக சரியான பட்ஜெட், அளவான வியாபாரமும் செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர், தியேட்டர் உரிமையாளர் என அனைவருக்கும் நல்ல லாபத்தை ஈட்டி தந்து இந்த வருடத்தின் முதல் வெற்றிப்படமாக "விஸ்வாசம்" தன் பெயரை பதிக்கும் என்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
 
mq1tjrgg

அஜித் தொடர்ந்து நான்கு படங்கள் சிவாவுடன் இணைந்து நடித்தது சிலரால் அவ்வப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் இதே ஃபார்முலாவை 80களில் ரஜினியும் இயக்குனர் S.P.முத்துராமனுடன் சேர்ந்து ஹிட்டடித்து இருக்கிறார். அதனால் இது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. அதே நேரத்தில் இது தலைக்கும் புதிதல்ல. ஆரம்பகாலத்தில் அஜித் உச்ச நட்சத்திரமாக மாறிய போது "நிக் ஆர்ட்ஸ்"க்கு தொடர்ந்து படங்களை கொடுத்து வந்தார். இதே போல் அப்போதும் அஜித் விமர்சனத்துக்கு உள்ளானார். இதற்கு அவர் எப்போதும் பதில் கூறாமல் இருந்தாலும், அவர் மௌனம் மற்றும் செயல் மூலமாக கூறும் ஒரே பதில்.... “நட்பு-நம்பிக்கை".
 
m0v9k9a

அதே போல் எவ்வளவு பெரிய படங்கள் உடன் வந்தாலும் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே எந்த பயமுமின்றி போட்டிபோட்டு அதில் பலமுறை வெற்றியும்பெற்றுள்ளார். இந்த முறை மேலும் சிறப்பாக பல வருடங்களுக்கு பிறகு தென்தமிழகத்தின் மண்ணின் மைந்தனாக அஜித் அவர்கள் நடித்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் மற்ற பகுதிகளை விட தென்னகத்தில் அஜித் அவர்களுக்கு அசைக்க முடியாத ரசிகர் பலம் உள்ளது. “தெற்கு சீமையிலே ......” என்ற பாட்டிற்கே அன்று அங்கு அரங்கம் அதிர்ந்த வரலாறு உண்டு. இன்று தேனி, மதுரையை களமாக கொண்டு படமே வெளியாவதால் "விஸ்வாசம்" அங்கு சக்கைபோடு போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக தல படத்தில் பேசவிருக்கும் மதுரையின் பேச்சுவழக்கு, இன்னும் அவருக்கு அங்கு பல ரசிகர்களை பெற்றுத் தரப்போகிறது என்றே சொல்லலாம்.
 
lsuueflg

இதுவரை தல அஜித்க்கு வந்த படங்களின் தலைப்புகளில் அவருக்கு மிக பொருத்தமான தலைப்பு "விஸ்வாசம்" -மாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி ரேசில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல நாளுக்கு பிறகு சினிமாவிற்கு வந்த போதும் அவரது ரசிகர்கள் அவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கொடுத்தார்கள். இடையில் சில தோல்வியால் துவண்டு இருந்த போதிலும் அவருக்கு உறுதுணையாக இருந்து அவரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார்கள். ரசிகர்கள் அன்பாக கொடுத்த அனைத்து பட்டங்களை அவர் துறந்த போதும் கூட அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். அஜித்தின் மேல் கொண்ட அன்பால் இணைந்து இயங்கி கொண்டிருந்த மன்றங்களை அவர் கலைத்த போதிலும், மன்றங்களை அமைதியாக கலைத்து விட்டு முன்பை விட அதிக அன்பாக இருந்தார்கள். படம் நடிப்பது என்வேலை, உங்கள் குடும்பங்களை பார்த்து கொள்வது உங்கள் வேலை என்று அவர் கூறியபோதும், அவரை எப்போதும் ட்ரெண்டில் வைத்து கொள்ளும் அளவிற்கு அவர் கூடவே இருந்தார்கள்.
இப்படி அவர் என்ன செய்தாலும், அவருக்கு என்ன நடந்தாலும் தல மேல் அவர்கள் ரசிகர்கள் கொண்ட விஸ்வாசத்திற்க்கு அளவே இல்லை. இத்தனை அன்புக்கு பரிசாகவும், ரசிகர்களின் விஸ்வாசத்திற்க்கு தலயின் விஸ்வாசமாகவும் வர இருப்பது தான் இந்த தல பொங்கலில் வெளியாகும் தலயின் "விஸ்வாசம்".
 
dcn3oq3g

கண்டிப்பாக அஜித் ரசிகர்கள் சிவாவுடன் இணைந்து மீண்டுமொரு படம் பண்ண கேட்கும் அளவிற்கு "விஸ்வாசம்" இருக்கும் என்று பலரால் எதிர்பார்க்கபடுகிறது. அது மட்டுமில்லாமல் இதுவரை "சிறுத்தை" சிவாவாக இருந்த இயக்குனர் சிவா , இந்த படத்தின் மூலம் கண்டிப்பாக "விஸ்வாசம்" சிவாவாக மாறும் அளவிற்கு படம் வெற்றி அடையும் என தல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அத்தனைக்கும் பதில் ஒன்று தான். தல ஸ்டைலில் "எண்ணம் போல் வாழ்க்கை".

அனைவருக்கும் தல பொங்கல் வாழ்த்துக்கள்..

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்