முகப்புகோலிவுட்

சென்னை MIT-யில் டிரோன் ஆலோசகராக அஜித் நியமனம்

  | May 04, 2018 15:12 IST
Ajith

துனுக்குகள்

  • ‘விஸ்வாசம்’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம்
  • விரைவில் இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது
  • 2018 UAV சேலஞ்ச் இறுதிச்சுற்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது
‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கவிருக்கும் இப்படம் ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். டி.இமான் இசையமைக்கும் இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது. வெகு விரைவில் இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கவுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் UAV ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் உதவி புரிவதற்காக டிரோன் டெஸ்ட் பைலட் மற்றும் UAV சிஸ்டம் அட்வைஸராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 UAV சேலஞ்ச் போட்டியின் இறுதிச்சுற்று ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT மாணவர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக தான் அஜித் நியமிக்கப்பட்டுள்ளாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்