முகப்புகோலிவுட்

குடும்பத்துடன் கோவாவுக்கு பறந்த அஜித்

  | November 17, 2018 14:36 IST
Ajith

துனுக்குகள்

  • சமீபத்தில், 'விஸ்வாசம்' படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றது
  • இப்படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • அஜித்தின் 59-வது படத்தை ‘சதுரங்க வேட்டை' வினோத் இயக்கவுள்ளாராம்
‘விவேகம்' படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்'. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடியுள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சமீபத்தில், இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அஜித்தின் 59-வது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இதனை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அஜித் தனது குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்