விளம்பரம்
முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதிக்கு அறிவுறை கூறிய 'தல'

  | March 10, 2017 15:19 IST
Thala Ajith

துனுக்குகள்

  • அஜித் நடிப்பில் தற்போது விவேகம் திரைப்படம் உருவாகி வருகிறது
  • விஜய் சேதுபதியை சந்திக்க அழைத்த தல அஜித்
  • விஜய் சேதுபதி இன்னும் கதைகளை தேர்ந்தெடுங்கள்
'தல' அஜித் பெரும்பாலும் தானாக முன்வந்து யாரையும் இதுநாள்வரை சந்தித்தது கிடையாது. அவரை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் அணுகினால் அவர் சம்மதம் தெரிவிப்பார் என்பது நாம் அறிந்த விஷயம் தான்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் 'விவேகம்' திரைப்படத்தின் சென்னை படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் நடந்து கொண்டிருக்கும் போது 'தல' அஜித் தனது உதவியாளரை அழைத்து நடிகர் விஜய் சேதுபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினாராம். 'தல' அஜித்திடம் இருந்து அழைப்பு வரவே உடனடியாக 'விவேகம்' படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் தளத்திற்கு சென்று சந்தித்தாராம். இந்த சந்திப்பில் 'தல' அஜித் நடிகர் விஜய் சேதுபதியிடம்,

"நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பத்தில் கவனமாக இருங்கள், நீங்கள் இன்னும் நிறைய நல்ல படங்கள் கொடுக்க வேண்டும். பிறருக்கும் நீங்கள் உதவி செய்வதாக அறிந்தேன். எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்திற்காகவும் இம்மூன்று நல்ல விஷயங்களையும் விட்டுவிடாதீர்கள்” என்று அறிவுரை செய்தாராம்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி இன்று வரை தன் நண்பர்களிடம் அஜித் சொன்னவற்றை சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறாராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்